திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிமன்ற அலுவலகங்களிலும் கிராம ஊராட்சித் தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும் : கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2022-08-13 22:50:13

திருவள்ளூர் ஆக 13 : இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி வருகின்ற 15.08.2022 அன்று திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிமன்ற அலுவலகங்களிலும் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும்.

அவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகளில் தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை இருந்தால், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்போன் எண்.7402902609 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், தேசிய கொடியினை அவமதிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.