பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் அத்தியாவசியத் தேவையான குடிநீர் பணிகள் செய்ய ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றம் :

பதிவு:2022-08-13 23:01:51



பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் அத்தியாவசியத் தேவையான குடிநீர் பணிகள் செய்ய ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றம் :

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் அத்தியாவசியத் தேவையான குடிநீர் பணிகள் செய்ய  ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றம் :

திருவள்ளூர் ஆக 13 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால்முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, பொற்செல்வி ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா பேசும் போது, ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து, பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய பழுதடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் மற்றும் குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அப்புறப்படுத்த ரூ.3 லட்சத்து 73 ஆயிரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் பொது நிதியிலிருந்து அத்தியாவசியத் தேவையான குடிநீர் பணிகள் செய்ய கைவண்டூர் ஊராட்சியில் பேருந்து நிறுத்தம் முதல் பைப்லைன் அமைக்க ரூ. 4 லட்சமும், சிறுவானூர் ஊராட்சி கொழுந்தலூர் மயானத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் கை பம்பு அமைக்க ரூ. 2.50 லட்சமும், நெய்வேலி ஊராட்சி நெய்வேலி காலனியில் கை மம்பு மற்றும் போர் அமைக்க ரூ.250 லட்சமும் பூண்டி ஊராட்சி பூண்டி கிராமம் மயானத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் கை பம்பு அமைக்க ரூ.2.50 லட்சமும், கலவை ஊராட்சியில் ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் அமைக்க ரூ.2. லட்சமும் வெலம கண்டிகை ஊராட்சியில் ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் அமைக்க ரூ. 2லட்சமும் வழங்க ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து.

இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் விஜி, பேபி, பிரசாந்தி, காயத்ரி, தேன்மொழி, மணி, பாலாஜி, சண்முகம், யதோதா, ஞானமுத்து, வெங்கடேசன், பிரபாவதி, சுபாஷினி, சுலோட்சனா, ரெஜீலா, மஞ்சு ஆகியோர் பங்கேற்றனர்.