திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் சிவ-விஷ்ணு மற்றும் ஸ்ரீஜலநாராயணி தாயார் சமேத ஸ்ரீஜல நாராயண பெருமாள் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை :

பதிவு:2022-08-13 23:55:14

திருவள்ளூர் ஆக 13 : திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகரில் உள்ள அருள்மிகு சிவ-விஷ்ணு மற்றும் ஸ்ரீஜலநாராயணி தாயார் சமேத ஸ்ரீஜல நாராயண பெருமாள் ஆலயத்தில் பூங்குழலி அம்பாள் மற்றும் பத்மாவதி தாயாருக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முன்னதாக திருவிளக்கு பூஜையின் மகிமை குறித்து தெய்வீக ஜோதிடர் ஏ.ஆர்.பாலகிருஷ்ண ரெட்டி பக்தர்களுக்கு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காகவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் திருப்பதி கபிலதீர்தம் திருக்கோயில் அலங்கார சாம்ராட் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பூங்கா நகர், ராஜாஜிபுரம், காக்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.

இந்த திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாக தலைவர் எம்.பசுபதி மற்றும் நி்ர்வாக குழு உறுப்பினர்கள் , கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.