திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே மோதல்

பதிவு:2022-08-16 14:29:01



திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே மோதல் : பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த தினேஷ் என்ற மாணவனுக்கு தலையில் அரிவாள் வெட்டு

திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே மோதல்

திருவள்ளூர் ஆக 16 : திருத்தணியில் இருந்து சென்னை வரை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருத்தணி அரக்கோணம் கடம்பத்தூர் திருவள்ளூர் ஆகிய பகுதியிலிருந்து புறநகர் ரயிலில் பயணம் செய்து பயின்று வருகின்றனர்.

இந்த மாணவர்களிடையே ரயிலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று அறிவுரைகள் வழங்கி வந்தனர்.இந்நிலையில் ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்ப்பட்ட மோதலில் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் தக்கோளம் பகுதியை சேர்ந்த 2-ம் ஆண்டு மாணவன் தினேஷ் தலையில் பலத்த அரிவாள் வெட்டு பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அரிவாள் வெட்டு காயங்களுடன் கல்லூரி மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.