பதிவு:2022-08-16 14:30:45
திருவள்ளூர் ராஜாஜி புரத்தில் உள்ள ஹீரோ கிட்ஸ் தனியார் குழந்தைகள் பள்ளியில் 75- வது சுதந்திர தினவிழா
திருவள்ளூர் ஆக 16 : திருவள்ளூர் ராஜாஜி புரத்தில் உள்ள ஹீரோ கிட்ஸ் தனியார் குழந்தைகள் பள்ளியில் 75- வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தபட்டது.அதனைத் தொடர்ந்து குழந்தைகள் அலங்கரிக்கப்பட்டு இந்திய தேசிய தலைவர்கள் அடையாளம் காட்டும் விதமாக பாரதியார், மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி,வீர நாச்சியார், காமராஜர்,அண்ணா, காவலர்கள்,டாக்டர்கள் என பல்வேறு தேச தலைவர்களை மக்களுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக மிகவும் நேர்த்தியாக வேடம் அணிந்து பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக காட்சியளித்தனர்.
பின்னர் பள்ளியின் வாசலில் இந்திய வரைபடம் வரைந்து வரைபடம் எவ்வாறு உள்ளதோ அதேபோன்று சிறு குழந்தைகள் அழகாக வரிசையாக நின்று கொண்டு தேசிய கொடியினை கையில் ஏந்தி மிகவும் பார்ப்பதற்கு வியப்பூட்டும் வகையில் குழந்தைகள் காட்சி அளித்தனர்.
விழாவில் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள்,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு களித்து வேடமணிந்திருந்த மாணவ மாணவிகளை பாராட்டினர்.