பதிவு:2022-08-18 10:55:15
இமயமலை துறவிகள் நேரடியாக வந்து சிவனுக்கு சிறப்பு பூஜை செய்கிறார்கள்
கடம்பத்தூர் ஆகத்து 17- திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் கிராமத்தில் எழுந்தருளும் காமாட்சி அம்மாள் உடனுறை இலுப்பேஸ்வரர் ஆலயத்தில் 1008 ருத்ராட்ச மணி அணிவித்து சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த சிவபூஜை இமயமலை கைலாசத்தில் இருந்து சிவா ஆன்மீக துறவிகள் நேரடியாக போளிவாக்கம் சிவாலயத்திற்கு வருகை தந்து சிறப்பு பூஜை நடத்தினர்.
பெரும் சக்திவாய்ந்த சிவபெருமானின் அருளால் ஊருக்கே பெருமை சேர்க்கும் விதமாக இமயமலையில் இருந்து நேரடியாக வந்து பூஜை புனஸ்காரங்கள் செய்து பெருமைக்குரியதாக இருக்கிறது என்று கிராம பொதுமக்கள் நெகிழ்ச்சியாக கூறுகின்றனர்.