பதிவு:2022-08-18 08:37:06
திருவள்ளூர் வட்டாட்சியராக என்.மதியழகன் பொறுப்பேற்றார் :
திருவள்ளூர் ஆக 17 : திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப் பணி, தமிழ்நாடு வருவாய் சார் நிலைப் பணி மற்றும் வட்டாட்சியர் பணியமைப்பில் 10 பேரை இடம் மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியராக இருந்த ஏ.செந்தில்குமார் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டு பொன்னேரி தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டார்.
அதனையடுத்து கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்தில் தனி வட்டாட்சியராக இருந்த என். மதியழகன் திருவள்ளூர் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டதையடுத்து இன்று திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக என். மதியழகன் முறைப்படி கோப்பில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.