பதிவு:2022-03-30 08:23:16
திருத்தணி அருகே மாற்று சமுதாய பெண்ணை காதலித்த கல்லூரி மாணவன் உடல் ரயில் தண்டவாளத்தில் மீட்பு : மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் திருவள்ளூர் எஸ்.பி.யிடம் புகார் :
திருவள்ளூர் மார்ச் 30 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்த ஜீவானந்தம் - சுதா தம்பதியினரின் மகன் தோனீஸ்வரன் தனியார் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் படிப்பு படித்து வந்தார். இவர் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார்.இவர் ஆர். எஸ் மங்காபுரம் கிராமத்தை சேர்ந்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த (முஸ்லீம்) பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 21-ந் தேதி திருத்தணி அடுத்த பொன்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மாணவன் தோனீஸ்வரன் உடல் சடலமாக கிடப்பதாக திருத்தணி போலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்து சென்று மாணவன் தோனீஸ்வரன் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மாணவனின் பெற்றோர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த மாணவனின் பெற்றோர் மகனின் இறப்பில் மர்மம் இருப்பதகாவும், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். சம்பவ தினத்தன்று அந்த பெண் செல்போனில் அழைத்ததின் பேரிலேயே மகன் சென்ற நிலையில் இரவு வெகு நேரமாகியும் வராத நிலையில் தேடிப் பார்த்த போது திருத்தணி அருகே பொன்பாடி ரயில் நிலையம் அருகில் சடலமாக மீட்கப்பட்டதால் மகன் சாவில் மர்மம் இருப்பதால் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.