பதிவு:2022-08-18 08:40:28
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 -வது சுதந்திர தின விழா :
திருவள்ளூர் ஆக 17 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்திய தேசத்தின் 75 -வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் விஷ்ணு சரண் தலைமை தாங்கினார்.பள்ளி இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.
அதனைத் தொடர்ந்து சின்னஞ்சிறு குழந்தைகளின், தேசப்பற்றையும், ஒழுக்கத்தையும், நேர்மையையும் வெளிப்படுத்தும் விதமான தேச பக்திப் பாடல்களும், நடனமும், நாடகமும்,குழுப்பாடல்களும், சுதந்திர உணர்வைத் தூண்டும் விதமான நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக காவல்துறை, திருவள்ளூர் காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வரும் பேராசிரியருமான .வீரபெருமாள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தேசப்பற்றை ஊட்டும் விதமாக தனது அனுபவத்தை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார்.
அப்பொழுது ஒழுக்கத்தையும், நேர்மையையும் மாணவர்களிடம் வளர்க்கும் விதமாக மகாபாரத்திலிருந்து கதை கூறி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கலியுகத்தில் என்ன நடைபெற இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது கராத்தே, சிலம்பம், தமிழ் பாரம்பரிய நாட்டுப்புற நடனம், பிரமிடு, செம்மொழியான தமிழ் மொழிப் பாடல் ஆகியவை கண்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது.சிலம்பம் மற்றும் கராத்தேவில் வெற்றி பெற்ற சாதனை புரிந்த மாணவர்களுக்கு நம் சிறப்பு விருந்தினர் பொன்னாடை போற்றி தனது வாழ்த்துக்களை மேடையில் தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விழாவின் நிறைவாக நாட்டுப்பண் பாடப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மகிழ்ந்தனர். விழாவில் தலைமை ஆசிரியர் பத்மாவதி, சுதந்திர தினத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட மோகனா, ஜாய்ஸ் தமிழ்ச்செல்வி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் பள்ளி முதல்வர். டாக்டர். ஸ்டெல்லா ஜோசப் நன்றி கூறினார்