பதிவு:2022-08-20 11:39:54
திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பார்த்தீனியம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவள்ளூர் ஆக 20 : திருவள்ளூர் மாவட்டம் திருவூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பார்த்தீனியம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பேராசிரியரும் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளருமான பெ.சாந்தி தலைமை தாங்கி பேசினார். பார்த்தீனியம் களைகள் எவ்வாறு பயிர்களை பாதிக்கிறது என்பது குறித்து எடுத்துரைத்தார். மேலும் இந்த பார்த்தீனயத்தால் மனிதர்களுக்கு தோல் அரிப்பு, ஆஸ்துமா, காய்ச்சல் ஏற்படுத்துவது குறித்தும்,பார்த்தீனியம் களைகள் எவ்வாறு பயிர்களை பாதிக்கிறது என்பது குறித்தும், மனிதர்களுக்கு தோல் அழற்ச்சி, ஆஸ்துமா, காய்ச்சல் ஏற்படுத்தவல்லது என்பதை விளக்கி கூறினார்.
அதனைத் தொடர்ந்து உதவி பேராரசியர் கே.சிவகாமி பேசும் போது, கிளைபோசாட் என்னும் களைக் கொல்லி கொண்டு களை கட்டுப்படுத்துவது குறித்தும் கல் உப்பை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 கிராம் என்கின்ற அளவில் களையின் மேல் விசை தெளிப்பான் கொண்டு தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதையும் விளக்கினார்.
இதன் தொடர்ச்சியாக வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும், நெல் ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் முன்னிலையில் பார்த்தீனியம் களையை கட்டுப்படுத்தும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர், விஞ்ஞானிகள்,அலுவலர்கள் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.