திருவள்ளூரில் வரி பிடித்தல் செய்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் :

பதிவு:2022-08-20 11:41:21



திருவள்ளூரில் வரி பிடித்தல் செய்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் :

திருவள்ளூரில் வரி பிடித்தல் செய்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் :

திருவள்ளூர் ஆக 20 : சென்னை வருமானவரித்துறை வரிப் பிடித்தம் சரகம் சார்பில், வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களுக்கான விழிப்புணர்வு முகாம்,, திருவள்ளூரில், நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமிற்கு காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மு.முருகன் தலைமை தாங்கினார்.

திருவள்ளுர் மண்டல இணைப்பதிவாளர் பா. ஜெயஸ்ரீ , மற்றும் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்ட இணைப்பதிவாளர் ஆர்.ஆனந்தி ஆகியோர் சிறப்புறை ஆற்றினர். இந்த விழிப்புணர்வு முகாமில் ,200க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியைச் சார்ந்த வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்த விழிப்புணர்வு முகாமை , ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டம், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியும் ஒருங்கிணைந்து நடத்தினர். இதில் வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீதர், மற்றும் சென்னை உட்பட 5-க்கும் மேலான அதிகாரிகள், பங்குபெற்று, வரிப்பிடித்தம் செய்தவற்கான விதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.