திருவள்ளூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2022-08-25 10:24:20

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் ஆக 23 : திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேலு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதிய மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் குறித்த ஓய்வூதியதாரர்களின் முறையீட்டு மனுக்கள் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியரால் 20.09.2022 தேதிவரை வரவேற்கப்படுகின்றன.

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பெயர், முகவரி, இறுதியாக பணிபுரிந்த அலுவலகம், தலைமை அலுவலகத்தின் முகவரி, ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதியப் புத்தக எண் மற்றும் கோரிக்கை எந்த அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது போன்ற விவரங்களை தங்கள் மனுவில் குறிப்பிடப்பட வேண்டும்.

இம்முறையீடுகள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் 20.09.2022 அன்று காலை 10.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பரிசீலனை செய்து தீர்வு செய்யப்படுவதற்கு தடையாக உள்ள இடர்பாடுகளுக்கு முடிவு காணவும், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் இக்கூட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.