பதிவு:2022-08-25 10:48:53
திருவள்ளூரில் சாலையில் சென்று கொண்டிருந்த டூ வீலர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு :
திருவள்ளூர் ஆக 23 : திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வீரண்ணன் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் பாலாஜி . பல்சர் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பாலாஜி வேலைக்கு சென்றவர் இன்று மாலை மீண்டும் வீடு திரும்பினார்.வீரண்ணன் தெருவில் இருசக்கர வாகனம் வந்தபோது திடீரென வாகனம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
நகரின் முக்கிய வீதியான வீரண்ணன் தெருவில் குடியிருப்புகள் அதிகம் இருப்பதால் உடனடியாக அங்குள்ள பொதுமக்கள் பக்கெட்டுகளில் தண்ணீரை கொண்டு வந்து எரிந்து கொண்டு இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது ஊற்றி கட்டுப்படுத்தினர்.இருசக்கர வாகனம் 75% முற்றிலும் எரிந்து நாசமானது. இதனை அடுத்து திருவள்ளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினர்.
இரு சக்கர வாகனத்தின் பேட்டரி சூடானதால் வாகனம் தீப்பற்றியதற்காக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.