திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 பேருக்கு ரூ.1.75 லட்சத்திற்கான ஆணைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

பதிவு:2022-08-25 10:52:17



திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 பேருக்கு ரூ.1.75 லட்சத்திற்கான ஆணைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்:

திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 பேருக்கு ரூ.1.75 லட்சத்திற்கான ஆணைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூர் ஆக 23 : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 74 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 33 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 26 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 63 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 79 மனுக்களும்; என மொத்தம் 275 மனுக்கள் பெறப்பட்டன.

பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு பயின்ற 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.1.50 இலட்சத்திற்கான ஆணைகளையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.25,000-த்திற்கான ஆணை என மொத்தம் 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.75 இலட்சத்திற்கான ஆணைகளை வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன், உதவி ஆணையர் (கலால்) கா.பரமேஷ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.