ஊத்துக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

பதிவு:2022-08-25 10:56:28



ஊத்துக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

ஊத்துக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

திருவள்ளூர் ஆக 23 : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 500 மாணவ, மாணவியர்களுக்கு சுமார் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச மிதிவண்டிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கி பேசினார்.

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 139 அரசு,அரசு நிதி உதவி பெறும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் மிதிவண்கடிள் வழங்கும் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் 10,832 மாணவர்களுக்கும் 13,080 மாணவியர்களுக்கும் ஆக மொத்தம் 23,912 மாணவ, மாணவியர்கள் பயன்பெற உள்ளனர். திருவள்ளுர் மாவட்டத்தில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 23,912 மாணவ, மாணவியர்கள் பங்கு பெறவுள்ளனர். இம்மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் செலவினமாக ஆண்கள் மிதிவண்டிக்கு ரூ.5.60 கோடியும், பெண்கள் மிதிவண்டிக்கு ரூ.6.52 கோடியும் என மொத்தம் ரூ.12.13 கோடி மிதிவண்டிகளுக்காக அரசு நதி ஒதுக்கீடு செய்து, மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

முதற் கட்டமாக, திருவள்ளுர் வருவாய் மாவட்டத்தில் உள்ள ஆவடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி காமராஜ நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆவடி காமராஜ நகர், அரசினர் மேல்நிலைப்பள்ளி திருநின்றவூர், அரசினர் மேல்நிலைப்பள்ளி தண்டுரை, அரசினர் மேல்நிலைப்பள்ளி சுந்தரசோழவரம், ஆர்.சி.எம். மேல்நிலைப்பள்ளி காமராஜ நகர் ஆவடி ஆகிய பள்ளிகளில் 11-ம் வகுப்பில் பயின்ற 471 மாணவர்களுக்கும், 774 மாணவியர்களுக்கும் என மொத்தம் 1,245 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசி;ன் மிதிவண்டி வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று இரண்டாம் கட்டமாக, ஊத்துக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 227 மாணவர்களுக்கும், தெலுங்கு வழியில் பயிலும் 15 மாணவியர்களுக்கும் என 242 மாணவ, மாணவியர்களுக்கும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 250 மாணவியர்கள் என மொத்தம் உள்ள 492 மாணவ, மாணவியர்களில் ஆண்கள் மிதிவண்டிக்காக ரூ.11,74,725-ம், பெண்கள் மிதிவண்டிக்காக ரூ.13,22,880-ம் என மொத்தம் ரூ.24,97,605 மதிப்பீட்டிலான இலவச மிதிவண்டிகள் 492 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் 19.02.2022 அன்று நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை அமைச்சர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், சார் ஆட்சியர் (திருவள்ளூர்) ஏ.பி.மகாபாரதி,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், ஆவடி மாவட்ட கல்வி அலுவலர் செ.ராதாகிருஷ்ணன், ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அ.அப்துல்ரஷித், துணைத் தலைவர் ர.குமரவேல், பள்ளி (ஏனம்பாளையம்) மேலாண்மை குழுத் தலைவர் ஜெ.மூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் தா.மாலா, பேரூராட்சி உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.