திருவள்ளூர் அடுத்த ஆற்காடு குப்பத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.200 கிலோ கஞ்சா - இரு சக்கர வாகனம் பறிமுதல் : கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது :

பதிவு:2022-08-25 11:19:35



திருவள்ளூர் அடுத்த ஆற்காடு குப்பத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.200 கிலோ கஞ்சா - இரு சக்கர வாகனம் பறிமுதல் : கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது :

திருவள்ளூர் அடுத்த ஆற்காடு குப்பத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.200 கிலோ கஞ்சா - இரு சக்கர வாகனம் பறிமுதல் : கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது :

திருவள்ளூர் ஆக 24 : தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் வரத் தொடங்கியதால் தமிழக அரசு அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும் ஆந்திர மாநிலத்திலிருந்து திருத்தணி வழியாக திருவள்ளூர் மற்றும் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களால் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனால் கஞ்சா கடத்தலைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்காடு குப்பம் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஓ.சி.குப்பம் பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்ததும், அதனை ஆற்காடு குப்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்டது ஆற்காடு குப்பம் பஜார் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் பூபாலன் என்கிற விக்னேஷ் (22) திருத்தணி சுப்பிரமணியசுவாமி அரசு கலைக் மற்றும் அறிவியல் கல்லூரி பி.ஏ.3-ம் ஆண்டு மாணவன, மற்றும் கஜேந்திரன் மகன் சரவணன் (22) என்பவன் ஜெயா கலைக்கல்லூரி நெமிலிச்சேரி எம்.எஸ்.சி., கணிதம் 3-ம் ஆண்டும், மற்றும் திருத்தணி அடுத்த நாபளூர் கிராமத்தைச் சேர்ந்த சேகரின் மகன் கமலேஷ் (22) திருத்தணி சுப்ரமணியசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், கடத்தலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேரையும் கைது செய்து , கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.