திருவள்ளூர் அடுத்த கீழ்மணம்பேடு பகுதியில் விவசாயிகளுக்கு நீர்மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி :

பதிவு:2022-08-25 11:23:29

திருவள்ளூர் அடுத்த கீழ்மணம்பேடு பகுதியில் விவசாயிகளுக்கு நீர்மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி :

திருவள்ளூர் அடுத்த கீழ்மணம்பேடு பகுதியில் விவசாயிகளுக்கு நீர்மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி :

திருவள்ளூர் ஆக 24 : திருவள்ளூர் மாவட்டம் திருவூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையமும், வேளாண்மைத் துறையும் இணைந்து வெள்ளவேடு அடுத்த கீழ்மணம்பேடு கிராமத்தில் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் பெ.சாந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது, விவசாயிகளுக்கு வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும், பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து நீர் மேலாண்மை, பார்த்தீனியம் களை கட்டுப்பாடு, காய்கறி தோட்டம் அமைத்தல், மண்வள மேலாண்மை, நுண்நீர் பாசன மேலாண்மை, பண்ணஐ இயந்திரமயமாக்கல் ஆகிய தலைப்புகளில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் யோகமீனாட்சி, முனைவர் சிவகாமி, முனைவர் பிரீத்தி, முனைவர் விஜயசாந்தி, மற்றும் முனைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.