பதிவு:2022-08-25 11:27:54
அரசு பள்ளிகள் தான் தரமான மாணவர்களை உருவாக்கி வருவதாக சென்னை வருமானவரித்துறை தலைமை ஆணையர் தெரிவித்தார்.
திருவள்ளூர் ஆக 24 : திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வருமானவரித்துறை தலைமை ஆணையர் ஜகான்செப் அஃத்தார் வலிமையான பாரதத்தை உருவாக்குவது குறித்து மாணவ மாணவர்களிடையே கலந்துரையாடி கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு வலிமையான நாட்டை உருவாக்குவதில் வருமான வரி செலுத்துவதன் அவசியம் குறித்து கட்டுரைப் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வருமானவரித்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது . திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் அமைந்த கே.எம். என். சகோதரர்கள் அரசு நகராட்சி பள்ளியில் நடந்த கட்டுரை போட்டியில் பங்கேற்ற பதினோறாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை நேரில் வந்து சென்னை வருமானவரித்துறை தலைமை ஆணையர் ஜகான்செப் அஃத்தார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் மாணவ மாணவியர்கள் உடன் அவர்களது இருக்கையில் அமர்ந்து அவர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அரசு பள்ளிகள் தான் தரமான மாணவர்களை உருவாக்கி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் சனத் குமார் ரகா நன்றியுரை வழங்கினார். பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் முருகவேல் உள்ளிட்ட ஆசிரியர்களும் ஆசிரியைகளும் பங்கேற்றனர்.