பதிவு:2022-08-25 11:38:08
திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடு மற்றும் அனைத்து அரசு துறையினருடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் :
திருவள்ளூர் ஆக 24 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடு மற்றும் அனைத்து அரசு துறையினருடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழல், சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு விநாயகர் சிலைகளை நிறுவவும், விநாயகர் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயர்நீதிமன்ற உத்திரவு படி வகுத்துள்ளது.
அதன்படி விநாயகர் சிலைகளை நிறுவ முன்கூட்டியே உரிய அனுமதியினை காவல் உதவி ஆணையர்கள்,சார்-ஆட்சியர்,வருவாய் கோட்ட அலுவலர்களிடம், விநாயகர் சிலையினை வைக்க விரும்பும் நபர், அமைப்பாளர் உரிய படிவத்தில் (படிவம்-1) ஓரு மாதத்திற்கு முன்னதாக மேற்கூறிய அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற மனு செய்யும் பொழுது, நில உரிமையாளர்களிடமிருந்து தடையில்லா சான்று பெறுதல் வேண்டும். அரசு நிலமாக இருப்பின் சம்மந்தப்பட்ட துறையினரிடமிருந்து தடையில்லா சான்று. (உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலை அல்லது சம்பந்தப்பட்ட துறை)
காவல் துறையின் தடையில்லா சான்று,தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் தடையில்லா சான்று,மின் இணைப்பு எவ்வாறு பெறப்படுகிறது என்பதற்கான கடிதம் மற்றும் தற்காலிக மின் இணைப்பு தொடர்பான மின்வாரியத்தின் தடையில்லா சான்று.மேற்கண்ட தடையில்லா சான்றுகளுடன் காவல் உதவி ஆணையர்கள்,சார்-ஆட்சியர்,வருவாய் கோட்ட அலுவலர்களிடம் மனு செய்யும் பட்சத்தில் உரிய பரிசீலனை செய்து, உரிய அனுமதி, படிவம்-2-ல் மேற்படி அலுவலர்களால் வழங்கப்படும். தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.
விநாயகர் சிலைகளை நிறுவ, வழிபட மற்றும் கரைத்தல் தொடர்பாக தமிழக அரசு மேலும் கீழ்;க்கண்ட நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது விநாயகர் சிலைகள், களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித இரசாயனக் கலவையற்றதுமாக இருத்தல் வேண்டும். நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். இராசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது. மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு விநாயகர் சிலைகள் செய்யப்படக் கூடாது.விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடத்தில் அமைக்கப்படும்; தற்காலிக கூடங்கள் எளிதில் தீப்பற்ற கூடியதாக இருத்தல் கூடாது. மேற்படி வழிபடும் இடத்தில் சென்று வர தனித்தனியே வழிகள் (உள்ளேஃவெளியே) ஏற்படுத்தல் வேண்டும்வழிபாட்டு இடத்தில் தேவையான மருத்தவ வசதிகளை நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் ஏதும் மேற்படி இடத்தின் அருகாமையில் இருத்தல் கூடாது.
வழிபாட்டிற்காக நிறுவப்படும் விநாயகர் சிலைகள் பீடத்தில் இருந்து 10 அடி உயரத்திற்கு மேல் இருத்தல் கூடாது.ஓலி பெருக்கி பயன்படுத்த காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே (பூஜை சமயத்தில் மட்டுமே) அனுமதி வழங்க இயலும். கூம்பு (கோன்) வடிவ ஓலிபெருக்கியினை பயன்படுத்த கூடாது.சட்ட விரோதமான செயல்கள் ஏதும் மேற்கொள்ளப்படமால் இருப்பதை நிகழ்ச்சி ஏற்;பட்டாளர்கள் கண்காணித்தல் வேண்டும். அனுமதியற்ற மின் இணைப்பு ஏதும் இருத்தல் கூடாது.வழிபாட்டிற்காக நிறுவப்படும் விநாயர் சிலைகள் இதர மத வழிபாட்டு தலம் ஃ மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே அமைத்தல் கூடாது.நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், இரண்டு தன்னார்வளர்களை 24 மணிநேரமும் மேற்படி விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடத்தில் மேற்படி சிலைகள் பாதுகாப்பிற்காக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
எந்த ஓரு அரசியல் பிரமுகர் மற்றும் மத தலைவர்கள் குறித்த விளம்பர பதாகைகள் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடத்தில் இருத்தல் கூடாது. விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடத்தில் எந்த ஓரு காரணத்தினை கொண்டும், மற்ற மதத்தினை பாதிக்கும் வகையிலான முழக்கங்கள் கூடாது.வருவாய் துறை, காவல் துறை மற்றும் மாசுக் கட்டுபாட்டு வாரிய துறைகளால் வழங்கப்படும்; அனைத்து நிபந்தனைகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சரியாக பின்பற்றப்பட வேண்டும்அனுமதி பெறப்பட்டு, பொது இடத்தில் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகள், சிலைகள் நிறுவப்பட்ட 5 தினங்களுக்குள், அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் கரைக்கப்பட வேண்டும்.விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட தினத்தில், அனுமதிக்கப்பட்ட தடத்தின் வழியாக முன்னதாக புறப்படுதல் வேண்டும்.விநாயகர் சிலைகள் எடுத்தச் செல்ல மினி லாரி, டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தல் வேண்டும். மாட்டு வண்டி,மீன் வண்டி,மூன்று சக்கர வாகனங்களை பயன்படுத்த கூடாது. மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும் வாகனத்தில் இருத்தல் வேண்டும்.விநாயகர் சிலைகள் நிறுவப்பட்;ட இடம், ஊர்வலம், மற்றும் கரைக்கும் இடத்தில் வெடிக்கும் வெடி பொருட்களை பயன்படுத்தல் கூடாது.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண், சார் ஆட்சியர் (திருவள்ளூர்) ஏ.பி.மகாபாரதி,அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் மகேஷ் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.