திருவள்ளூரில் ஆப்தமித்ரா தன்னார்வலர்களுக்கான வெள்ளம், தீ தொடர்பான ஒத்திகை பயிற்சி :

பதிவு:2022-08-25 11:40:58



திருவள்ளூரில் ஆப்தமித்ரா தன்னார்வலர்களுக்கான வெள்ளம், தீ தொடர்பான ஒத்திகை பயிற்சி :

திருவள்ளூரில் ஆப்தமித்ரா தன்னார்வலர்களுக்கான வெள்ளம், தீ தொடர்பான ஒத்திகை பயிற்சி :

திருவள்ளூர் ஆக 24 : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் தீயணைப்புத்துறை மற்றும் தமிழ்நாடு தேசிய பேரிடர் மீட்பு படை ஆகிய துறைகளின் மூலம் ஆப்தமித்ரா தன்னார்வலர்களுக்கான வெள்ளம், தீ தொடர்பான ஒத்திகை பயிற்சி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆப்தமித்ரா திட்ட ஒருங்கிணைப்பாளர் லிக்குன் பத்ரா முன்னிலையில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் வீதம் மூன்று தொகுதிகளாக மொத்தம் 400 தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு 18.08.2022 முதல் திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், சீனிவாச நகர், எம்.எஸ்.தோனி எஸ்.பி.அவென்யு, எண்.23 என்ற முகவரியில் இயங்கும் காந்தி பவுண்டேஷன் என்ற பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆப்தமித்ரா பயிற்சியில் ஒரு பகுதியாக தீயணைப்புத்துறை மற்றும் தமிழ்நாடு தேசிய பேரிடர் மீட்பு படை ஆகிய துறைகளின் மூலம் ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் 120 நபர்களுக்கு வெள்ளம், தீ தொடர்பான ஒத்திகை பயிற்சி இன்று திருவள்ளுர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை உதவி ஆணையர் கெ.ரா.திவ்யஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) கே.பரமேஷ்வரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் என்.பாஸ்கரன், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உதவி அலுவலர் எஸ்.வில்சன் ராஜ்குமார். பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் வீ.விமலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்