திருவள்ளூர் அருகே குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல் : தொடர்ந்து விற்பனை செய்தால் நடவடிக்கை :காவல்துறையினர் எச்சரிக்கை :

பதிவு:2022-08-25 11:55:04



திருவள்ளூர் அருகே குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல் : தொடர்ந்து விற்பனை செய்தால் நடவடிக்கை :காவல்துறையினர் எச்சரிக்கை :

திருவள்ளூர் அருகே குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல் : தொடர்ந்து விற்பனை செய்தால் நடவடிக்கை :காவல்துறையினர் எச்சரிக்கை :

திருவள்ளூர் ஆக 25 : தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. அதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி., பா.சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுமாவிலங்கை கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது கோபால் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ் 240 பாக்கெட், கூலிப் 36 பாக்கெட், விமல் 270 பாக்கெட், வி1- 240 பாக்கெட், எம்டிஎம் 120 பாக்கெட் ஆகியவற்றை பறிமுதல் செய்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களை பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்ததாக கோபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

அதே போல் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்தரை கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் கடைகளில் தீவிர சோதனை செய்தனர். அப்போது சத்தரை தோப்பு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையில் வைத்திருந்த ஹான்ஸ் 28பாக்கெட், விமல் 28 பாக்கெட், வி1 - 33 பாக்கெட் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.