பதிவு:2022-08-25 12:01:35
பூண்டியில் 19 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் : 4 மாத கர்ப்பம்: சமையல் காரர் கைது :
திருவள்ளூர் ஆக 25 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் துரைவேல் என்பவரது மகன் எல்லன் (47). சமையல் காரரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஆடு மேய்க்க வந்த போது பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மேற்கொண்ட விசாரணையில் சமையல் காரர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து 4 மாத கர்ப்பிணியாக இருப்பதால் இந்த வழக்கு திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சமையல் காரர் எல்லன் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.இதையடுத்து சமையல் காரர் எலன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.