திருவள்ளூர் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4.350 டன் ரேசன் அரிசி, 900 கிலோ கோதுமை பறிமுதல் : ஒருவர் கைது :

பதிவு:2022-08-25 12:04:23



திருவள்ளூர் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4.350 டன் ரேசன் அரிசி, 900 கிலோ கோதுமை பறிமுதல் : ஒருவர் கைது :

திருவள்ளூர் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4.350 டன் ரேசன் அரிசி, 900 கிலோ கோதுமை பறிமுதல் : ஒருவர் கைது :

திருவள்ளூர் ஆக 25 : திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசார் தீவர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று திருவள்ளுர் அடுத்த நெமிலிச்சேரி வெளிவட்ட சாலை வடக்கு பிரகாசம் நகரில் பொது விநியோகதிட்ட ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் தலைமையில் தலைமைக் காவலர்கள் செந்தில்குமார், புஷ்பராஜ் ஆகியோர் சோதனை மேற்கொண்ட னர்.

அப்போது அப்பகுதியில் இருந்த வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TN-06-D-0883 என்ற என்ற நான்கு சக்கர வாகனத்தில் 50 கிலோ எடைகொண்ட 40 மூட்டைகள் என 2 டன் அரிசி மற்றும் வீட்டிற்குள் சோதனை செய்த போது 50 கிலோ எடை கொண்ட 47 மூட்டைகளாக 2.350 டன் ரேசன் அரிசி என மொத்தம் பொது விநியோக ரேசன் அரிசி சுமார் 4.350 டன் அரிசியும், அதே போல் 45 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகள் என 900 கிலோ கோதுமை பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவை ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நெமிலிச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 4.350 டன் ரேசன் அரிசி மற்றும் 900 கிலோ கோதுமை ஆகியவற்றை குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்டதாக சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் சந்திரசேகர் (32) எனபவரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுததிய வாகனத்தையும் பறிமுதல் செய்து கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சந்திரசேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சக்கரவர்த்தி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.