பட்டரைபெரும்புதூரில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :

பதிவு:2022-08-25 12:16:09



பட்டரைபெரும்புதூரில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :

பட்டரைபெரும்புதூரில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :

திருவள்ளூர் ஆக 25 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், பட்டரைபெரும்புதூரில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் திறந்து வைத்து, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆணையரும் மேலாண்மை இயக்குநருமான ந.சுப்பையன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார்.

பட்டரைபெரும்புதூரில் புதிதாக 5,000 லிட்ட்ர் கொள்ளளவு கொண்ட பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டதன் மூலம் 25 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை சார்ந்த பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். இதன் மூலம் தரமான பாலை ஒன்றியத்திற்கு அனுப்பி அதற்குரிய விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. பால் பதப்படுத்தும் பணி உடனடியாகவும், எளிமையாகவும் அச்சங்கத்தில் நடைபெறுவதால்; பால் கெட்டு போகாமல் நீண்ட நேரம் பால் பதப்படுத்தப்பட்டு தரமான பால் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. இந்நிலையத்தின் மூலமாக இப்பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் பால் உற்பத்தி பெருகி பொருளாதாரம் மேம்படைய வழி வகுக்கிறது.

இப்பட்டரைபெரும்புதூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலமாக பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பாலானது காக்களுர் பால் பண்ணைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு அவைகள் பால் பாக்கெட்டுகள் மூலமாக பொதுமக்களுக்;கு நேரடியாக விநியோகிக்கப்படுகிறது. இதனால் பால் விரைவில் கெட்டு போவது தடுக்கப்பட்டு சுத்தமான, தரமான தூய பால் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் திருத்தணி நகர்மன்ற உறுப்பினர் எம்.பூபதி, திருவள்ளுர் ஆவின் பொது மேலாளர் ஜெயக்குமார், துணை பதிவாளர் (பால்வளம்) சித்ரா, பட்டரைபெரும்புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.ராமசந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.