திருத்தணியில் உறவினர்களின் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பத்தவரிடம் 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது : லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடவடிக்கை :

பதிவு:2022-08-26 17:47:47

திருவள்ளூர் ஆக 26 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் வினோத். இவர் தனது தாத்தா கோவிந்தராஜ், மாமா கஜேந்திரன் ஆகியோருக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு திருத்தணி வருவாய் பெண் ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் விண்ணப்பித்துள்ளார். இருவருக்கும் இறப்பு சான்றிதழ் வழங்க ரூபாய் 2000 லஞ்சமாக வழங்க வேண்டும் என வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத் திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து காஞ்சிபுரம்- திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்த ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 2000-க்கான ரூபாய் நோட்டுக்களை வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி இடம் வழங்கினர்.

அதை அவர் பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவாய் ஆய்வாளரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனால் திருத்தணி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.