தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபரிடம் சிக்னல் என்ற செயலியில் பேசியதாக திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த நபர் கைது :

பதிவு:2022-08-26 18:28:37



தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபரிடம் சிக்னல் என்ற செயலியில் பேசியதாக திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த நபர் கைது :

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபரிடம் சிக்னல் என்ற செயலியில் பேசியதாக திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த நபர் கைது :

திருவள்ளூர் ஆக 26 : சென்னை ஆர் கே நகரைச் சேர்ந்த சாகுல் அமீதுவின் மகன் ராஜா முகம்மது (26). இவர் கடந்த ஒரு வருடமாக திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட காக்களூர் சாலையில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி காக்களூர் பகுதியில் உள்ள கறிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார் .இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவு போலீசார் ராஜா முகமதுவை வீட்டில் வைத்து கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் இவர் சவூதியில் திவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நபர் ஒருவருடன் சிக்னல் என்ற செயலியில் அவருடன் பேசியதாக குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் ராஜா முகமதுவிடம் மணவாளநகர் காவல் நிலையத்தில் வைத்து என் ஐ ஏ., ஐ பி., ரா- உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் .

இதில் சட்டவிரோதமாக செயல்படும் சிக்னல் என்ற சமூக வலைதளத்தில் தேச விரோதிகளுடன் பேசியதாகவும் அதில் பேசிய நபர் தன்னை சவூதிக்கு வருவதற்கான பாஸ்போர்ட் ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், இஸ்லாமிய இனத்தை மேம்படுத்த நீ வரவேண்டும் எனவும் கூறியதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ராஜா முஹம்மது அவரது முகநூல் பக்கத்தில் இஸ்லாமிய மதத்தை முன்னிறுத்தி பேசுவதாகவும் மற்ற மதத்தினரை தாழ்த்தி பேசும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும் கூறி பல்வேறு வழக்குகள் பதிவு செய்து திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மூகாம்பிகை முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைத்தனர்.தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவரிடம் திருவள்ளுரைச் சேர்ந்த நபர் சிக்னல் என்ற செயலில் பேசி தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.