திருவள்ளூரில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களின் 70 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 10 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் :

பதிவு:2022-08-26 22:12:17

திருவள்ளூர் ஆக 26 : தமிழகம் முழுவதும் நடிகரும்,தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களின் 70 வது பிறந்த நாள் விழா தேமுதிக கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.அதன் ஒரு பகுதியாக தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தேமுதிக கட்சி திருவள்ளூர் ஒன்றிய கழக செயலாளர் பா. ரஜினிகாந்த் தலைமையில் 25 ம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

மேலும் மகப்பேறு மருத்துவ வார்டில் உள்ள அனைத்து குழந்தைகளின் தாய்மார்களுக்கு சேலை,பழங்கள் மற்றும் இனிப்பு வழங்கி விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடினர்.இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆயில் சரவணன்,புஜ்ஜி,முரளிகீருஷ்ணன்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஒண்டிகுப்பம் சேகர்,எம்.பாஸ்கர்ராஜ்,சசிகுமார், ஒன்றிய நிற்வாகிகள். எஸ்.காமாச்சி, சுகுமார்,பெருமாள்பட்டு, பி.மணி,புல்லரம்பாக்கம் கணேசன், டி.எஸ்.தங்கவேல்,திருவூர், எல்.புஷ்பராஜ், கீழானூர் சுந்தர், கோவர்தனன், எஸ்.கார்த்திக் எஸ்.சந்துரு, மகேந்திரன்,பி.அருள் மற்றும் நகர ஒன்றிய மாவட்ட கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

அதனைத் தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் தேமுதிக கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.