பதிவு:2022-03-31 11:36:17
திருவள்ளூரில் மாவட்ட வளர்ச்சி பணிகள் மேம்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் 69 குழுக்களுக்கு நிதியுதவி : அமைச்சர் வழங்கினார் :
திருவள்ளூர் மார்ச் 31 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் மேம்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, திறன் மேம்பாட்டுத்துறை, வங்கி கடன் இணைப்பு திட்டம், உணவு மற்றும் கூட்டுறவுத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகர்ப்புறம் மேம்பாடு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சாலை பாதுகாப்பு மேம்பாடு, பொது பிரச்சனைகளை களைவதறக்hன வழிமுறைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட வளர்ச்சி பணிகள் மேம்பாடு தொடர்பாக மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் கலந்தாலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 54 உற்பத்தியாளர் குழுக்களுக்கு துவக்க நிதி தலா ரூ.75,000 வீதம் ரூ.40.50 இலட்சமும், 2 தொழில் குழுக்களுக்கு தலா ரூ.75,000 வீதம் ரூ.1.50 இலட்சமும், 13 சமுதாய பண்ணை பள்ளிகள் மூலம் ஏற்படுத்தப்பட்ட உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.64,000 வீதம் ரூ.8.32 இலட்சமும் என மொத்தம் 69 குழுக்களுக்கு ரூ.50.32 இலட்சம் மதிப்பீட்டிலான நிதியுதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்; வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்),ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி),ச.சந்திரன் (திருத்தணி),துரை சந்திரசேகர் (பொன்னேரி),மாவட்ட வன அலுவலர் கோ.ராம்மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.மீனா பிரியா தர்ஷிணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.