திருவள்ளூர் ஒன்றியத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் :

பதிவு:2022-08-26 18:38:12



திருவள்ளூர் ஒன்றியத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் :

திருவள்ளூர் ஒன்றியத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் :

திருவள்ளூர் ஆக 26 : திருவள்ளூர் அடுத்த ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் செயலர்,மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி சாண்டில்யன் கலந்து கொண்டு வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் கடமைகள், பொறுப்புகள், செயல்பாடுகள் குறித்தும் குழந்தைகள் பாதுகாப்பு சம்மந்தமான சட்டங்கள் குறித்தும்,மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

ஏழை எளிய மக்கள் தங்களது சட்டம் மற்றும் சட்டம் சாரா பிரச்சனைக்கு தங்களது அலுவலகத்தை அனுகலாம் என்றும் பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல், குழந்தை திருமணத்தை ஒழித்தல். குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல்,ஊராட்சி மன்ற தலைவர்களின் கடமைகள் குறித்தும் எடுத்து கூறினார்.

அதனைத் தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி பேசியபோது ஒன்றிய அலுவலகத்திலும் ,ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு சம்மந்தமாக முக்கிய தொலைபேசி எண்ணை பொதுமக்களுக்கு தெரியபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்வதாக கூறினார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக மேற்பார்வையாளர் பள்ளிகளுக்கு குழுவாக சென்று பார்வையிட்டு வருவதாகவும், ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பட்டியல் மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பெயர் பட்டியல் சுவரில் எழுதப்படும் என்றும் தெரிவித்தார். இளம்பருவத்தினருக்கு தேவையான சுகாதாரம் மற்றும் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பள்ளிகளில் வழங்குமாறு மருத்துவ அலுவலருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதில் திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) காந்திமதிநாதன், மாவட்ட குழந்தைகள் அலகை சார்ந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மலர்விழி, வட்டார கல்வி அலுவலர் வீரராகவன்,கல்யாண குப்பம் ஆரம்ப சுகாதார மையம் மருத்துவ அலுவலர், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்டீபன்,ஈக்காடு ஊராட்சி மன்ற தலைவர் லாசன சத்யா,புல்லரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன்,காக்க;ர் ஊராட்சி மன்ற தலைவர் சுபத்ரா ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.