காக்களூர் ஊராட்சியில் சாலை விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி :

பதிவு:2022-08-27 15:09:18



காக்களூர் ஊராட்சியில் சாலை விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி :

காக்களூர் ஊராட்சியில் சாலை விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி :

திருவள்ளூர் ஆக 27 : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காக்களூர் ஊராட்சியில் அமைந்துள்ள சின்னி ஸ்ரீராமுலு விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்களுடனான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தாளாளர் ஜி. ரவிக்குமார் தலைமை தாங்கினார்.நிகழ்வை நுகர்வோர் பாதுகாப்பு டிரஸ்ட் டி.பாபு ஒருங்கிணைத்தார். பள்ளி முதல்வர் டி.பாமா அனைவரையும் வரவேற்றார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.மோகன் ஆணைக்கிணங்க திருவள்ளூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கோ .மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ செல்வங்களுக்கு புரியும் வகையில் அழகிய சொல் நயத்துடன் சாலை பயன்பாட்டாளர்கள் யார்,சாலை கடக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை, சாலை விடுபட்ட வெள்ளை கோடுகள் என்ன சொல்கிறது, விடுபடாத வெள்ளை கோடுகள் என்ன தெரிவிக்கிறது, மஞ்சள் நிற கோடுகள் ஏன் உயிர்கோடுகள் என்று சொல்லபடுகிறது,இளம் சிறார் சைக்கிள் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதி,மாணாக்கர் இடையே கேள்வி பதில்,சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் பள்ளி மாணவ மாணவிகள் 400 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இறுதியில் நுகர்வோர் பாதுகாப்பு டிரஸ்ட் மேலான் செயளர் டி.பாபு நன்றி கூறினார்.