பதிவு:2022-08-29 16:16:04
திருவள்ளூர் மாவட்டத்தில் “சகி" என்ற பெண்களுக்கான ஓருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் ஆக 29 : திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் “சகி" என்ற பெண்களுக்கான ஓருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் பணிபுரிய திருவள்ளூர் மாவட்டத்தில் நிரந்தர முகவரியைக் கொண்ட கீழ்கண்ட நிலைகளில் தகுதி பெற்ற பெண் நபர்களினை ஒப்பந்த பணியாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
திருவள்ளுர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் 15.09.2022-ற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.வழக்கு பணியாளர் (காலிப்பணியிடம் 4) : சமூக பணியில் இளங்கலைப் பட்டம்,சமூகவியல்,சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம்,உளவியல்,சட்டம்,பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களின் நிர்வாக அமைப்பில் அல்லது அதற்கு வெளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் தேவை. மாத சம்பளம் ரூ.12,000,அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள் ஆகும்.
பல் நோக்கு உதவியாளர் (காலிப்பணியிடம் 1) : விண்ணப்பதாரர் அலுவலக அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 24 மணி நேர சேவையை வழங்க அவர் (பகல் மற்றும் இரவு) ஷிப்ட் முறையில் பணி மேற்கொள்ள வேண்டும். மாத சம்பளம் ரூ.6,400 (அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள்)
மேற்படி பணியிடங்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 2வது தளம், திருவள்ளூர் மாவட்டம் - 602001. தொலைப்பேசி எண்.044-29896049 என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.