பதிவு:2022-08-30 22:54:27
திருவள்ளூர் அருகே 60 வயது முதியவர் தூக்கில் பிணமாக மீட்பு : கடன் தொல்லையால் தற்கொலையா , அடித்துக் கொலையா? மப்பேடு போலீசார் விசாரணை :
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பேரம்பாக்கம் அடுத்த சிவபுரம் கிராத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோவிந்தசாமி, (60) இவர் கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சியில் உள்ள பஞ்சமாந்தாங்கல் ஏரியில் மீன் வளர்த்து அதை விற்பனையும் செய்து வரும் இவர் ஏரிக்கரையோரம் குடிசைப் போட்டு தனியாக இருந்து மீன்களை பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை இவர் அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் துாக்கிட்டு இறந்து கிடப்பதாக மப்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மப்பேடு போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முதியவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்தை கைப்பற்றியதாவும். அதில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இவருக்கும் ஏரியில் மீன் பிடிப்பத்தில் தகராறு இருந்து வந்ததாகதும், கடன் தொல்லையும் இருப்பதாக தெரிகிறது என மப்பேடு போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இறந்து கிடந்த முதியவர் கடன் தொல்லையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்தில் வழக்கு பதிந்து விசாரித்து வருவதாக மப்பேடு போலீசார் தெரிவித்தனர்.