திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கி கடன் தொகைக்கான காசோலை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

பதிவு:2022-08-30 23:22:19



திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கி கடன் தொகைக்கான காசோலை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கி கடன் தொகைக்கான காசோலை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூர் ஆக 30 : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 59 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 23 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 16 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 38 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 46 மனுக்களும்; என மொத்தம் 182 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, கூட்டுறவுத்துறை சார்பாக மாதர்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் சுய தொழில் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக வங்கி கடன் தொகை ரூ.36,000-ம் பெற்றதற்கான காசோலையையும்,செயற்கை கால் வேண்டி விண்ணப்பித்த ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,300 மதிப்பிலான ஒரு செயற்கை அவயத்தினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

முன்னதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 145 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 118 உயர்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 263 அரசு பள்ளிகளுக்கு தலா இரண்டு செஸ் போர்டுகள் வீதம் 526 செஸ் விளையாட்டு உபகரணங்களை வழங்கும் அடையாளமாக 5 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, உதவி ஆணையர் (கலால்) கா.பரமேஷ்வரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பி.ப.மதுசூதணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ.அருணா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.