பதிவு:2022-08-30 23:27:33
திருவள்ளூர் அடுத்த எறையூர் கிராமத்தில் தர்மராஜா திருக்கோவிலில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு தீமிதி திருவிழா :
திருவள்ளூர் ஆக 30 : திருவள்ளூர் அடுத்த எறையூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் வசந்த உற்சவ தீமிதி திருவிழா நிகழ்ச்சி 19 8 2022 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து வேதகால பூஜையும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் திரௌபதி அம்மனுக்கு அபிஷேகம் அபிஷேகத்துடன் துவக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது சிறப்பு பூஜைகளும் கரகம் எடுத்தல் அம்மனுக்கு கூழ்வார்த்தல் மற்றும் பாரதப்போர் தெருக்கூத்து நிகழ்ச்சியும் கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இறுதி நாளான 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு மேல் தீமிதி திருவிழாவில் சுமார் 84 பேருக்கு மேல் காப்பு கட்டிய குமாரசாமிகள் தீ மிதித்து அம்மனின் வேண்டுதலை நிறைவேற்றினர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிராம முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்தனர். ஊராட்சி மன்ற தலைவர் உமா ரங்கநாதன் கோவில் தர்மகர்த்தா ஆர்.இளங்கோவன் கோவில் பூசாரி நேதாஜி மற்றும் ஆர்.மனோகரன் ஆகியோர விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தீமிதி திருவிழாவிற்கு பல்வேறு கிராமங்களில் இருந்தும் நகரங்களிலிருந்தும் சுமார் 1000 -க்கும் மேற்பட்டோர் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்றனர்.