பெரியகுப்பத்தில் தடை செய்யப்பட்ட 1. 8 கிலோ குட்கா பறிமுதல் : ஒருவர் கைது :

பதிவு:2022-08-31 13:36:26



பெரியகுப்பத்தில் தடை செய்யப்பட்ட 1. 8 கிலோ குட்கா பறிமுதல் : ஒருவர் கைது :

பெரியகுப்பத்தில் தடை செய்யப்பட்ட 1. 8 கிலோ குட்கா பறிமுதல் : ஒருவர் கைது :

திருவள்ளூர் ஆக 31 : திருவள்ளூர் மாவட்டத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாகன சோதனையில் ஈடுபடுவது , பெட்டிக் கடைகளில் ஆய்வு செய்வது போன்ற கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருவள்ளூர் டவுனில் குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி அறிவுறுத்தலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பெரியகுப்பம் கற்குழாய் சாலை தெருவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கண்ணன் (38) என்பவர் அவரது பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 1.8 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 1.8 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் விற்பனையில் ஈடுபட்டதாக கண்ணனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.