திருவள்ளூரில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் : 30 பெண்கள் உட்பட 120 பேர் கைது :

பதிவு:2022-08-31 16:16:00

திருவள்ளூர் ஆக 31 : திருவள்ளூரில் உள்ள உழவர் சந்தை அருகே நேற்று திருவள்ளூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விலைவாசி உயர்வு,வேலையின்மை, மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்து மக்கள் விரோத ஆளும் மத்திய பா.ஜ.க அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கஜேந்திரன்,மாவட்ட துணை செயலாளர்கள் சரவணன் அருள்,மாவட்ட பொருளாளர் மயில்வாகணன்,விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜா, நிர்வாகி கீர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இதில் திரளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து.. அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய். பெட்ரோல்,டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கவேண்டும் என்றும், சொத்து வரி உயர்வு வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையான உழவர் சந்தை அருகே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் மறியில் ஈடுபட்ட 30 பெண்கள் உட்பட 120 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.