பதிவு:2022-08-31 16:19:09
திருவள்ளூரில் வரையறுக்கப்பட்ட ஊதியம் கேட்டு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் :
திருவள்ளூரில் வரையறுக்கப்பட்ட ஊதியம் கேட்டு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் :
திருவள்ளூர் ஆக 31 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி தர்ணா போாரட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் என்.தேவ அதிசயம் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பி.எஸ்.நாகராஜன், கே.இளையராஜா, எஸ்.மதிவாணன், எஸ்.கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.இளங்கோவன் போராட்டத்தை தொடக்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் பா.மணிகண்டன் விளக்கவுரையாற்றினார்.
அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும். தனியார் குழுக்களுக்கு வழங்கக் கூடாது.. முறையான கால முறை ஊதியம், குடும்ப நல ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த தர்ணா போராட்டத்தில் நிர்வாகிகள் எஸ்.காந்திமதிநாதன், க.மணிகண்டன், க.திவ்யா, இரா.பாண்டுரங்கன், ஆர்.மில்கி ராஜாசிங், ஆர்.எம்.செந்தில்குமார். சி.அமுதா, ஆர்.கோவிந்தன், எம்.யோகராசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.