பதிவு:2022-08-31 16:24:33
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பாடசாலை சார்பில் இயற்கை முறையில் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு தெரு நாடகம் :
திருவள்ளூர் ஆக 31 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பாடசாலை இ.சி.ஓ கிளப் மாணவர்களின் இயற்கையான முறையில் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை மட்டுமே பயன்படுத்தல் குறித்த விழிப்புணர்வு தெரு நாடகம் ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமம் சார்பில் நடைபெற்றது.
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமம் சார்பில் பள்ளி தாளாளர் விஷ்ணுசரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு தெரு நாடகத்தில் ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவ, மாணவியர் பங்கு பெற்றனர்.
இந்த விழிப்புணர்வு தெரு நாடகம் திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இயற்கையான முறையில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த பதாகைகள் (பேனர்கள்) மற்றும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை இ.சி.ஓ கிளப் மாணவர்கள் கரங்களில் ஏந்தி விழிப்புணர்வை எற்படுத்தினர்.
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்தப் நாடகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.