நசரத்பேடடை ஒன்றிய நடுநிலைப்பள்ளி “நம்ம ஊரு சூப்பரு“ என்ற திட்டத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் அமுதா ஆய்வு :

பதிவு:2022-09-02 10:48:19



நசரத்பேடடை ஒன்றிய நடுநிலைப்பள்ளி “நம்ம ஊரு சூப்பரு“ என்ற திட்டத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் அமுதா ஆய்வு :

நசரத்பேடடை ஒன்றிய நடுநிலைப்பள்ளி “நம்ம ஊரு சூப்பரு“ என்ற திட்டத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் அமுதா ஆய்வு :

திருவள்ளூர் செப் 01 : தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் "நம்ம ஊரு சூப்பரு" - எனும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் ஆகஸ்ட் 15 கிராம சபைக் கூட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 20, 2022 முதல் அக்டோபர் 2 முடிய நடைபெற்று வருகிறது.

"ஒன்றினைவோம், பசுமையும் தூய்மையும் நமதாக்குவோம்"-என்ற முழக்கத்துடன் தொடங்கப்ட்ட இந்த மக்கள் இயக்கத்தின் நோக்கம் சமுதாயத்தின் அனைத்து பங்கேற்பாளர்களின் பங்களிப்புடன் பொது இடங்களில் உள்ள கழிவுகளை அப்புறபடுத்துத்துதல், பொதுக்கட்டிடங்களை தூய்மையாக பராமரித்தல், அனைத்து வீடுகளிலும் குப்பைகளை தரம் பிரித்தல், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகளை தடை செய்தல் - மாற்று பொருள்பயன்படுத்துதல், திரவக்கழிவு மேலாண்மை, சுத்தமான குடிநீர் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த முயற்சிகள், ஊட்டச்சத்து தோட்டங்கள் வளர்த்தல் மற்றும் பசுமை கிராமமாக மாற்ற மரக்கன்றுகள் நடுதல் ஆகிய முன் முயற்சிகளை உள்ளடக்கியதாகும்.

"நம்ம ஊரு சூப்பரு" - எனும் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின செயல்பாடுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலர் அமுதா திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் நசரத்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செம்பரம்பாக்கம் அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் குத்தம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, மாணவ, மாணவியர்களுக்கும் பள்ளியில் சுத்தம் பராமரித்தலில் அவர்கள் பங்கு குறித்தும் கைகழுவும் முறை குறித்து செயல்விளக்கம் செய்துகாண்பித்து கற்க செய்தார். மேலும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்களுக்கு தங்கள் பள்ளி, வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல் குறித்த பண்புகளை கற்றுத்தர வேண்டியதன் அவசியம் மற்றும் வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து தூய்மை காவலருக்கு வழங்குதலின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மேற்படி, விவரத்தினை மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்க தெரிவிக்கப்பட்டது.

மேலும், கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத பொருட்கள் என வகைப்படுத்துதல் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஒவ்வொரு கழிவு குறித்தும் கேள்வி எழுப்பி சரியான பதிலளித்த மாணவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார். தொடர்ந்து, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பங்கேற்புடன் இந்த இயக்கம் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பங்கு பற்றி அவர்களுக்கு அறிவுரை அளித்து வீடுகளிளேயே குப்பைகளை வகைபடுத்தி தூய்மை hவலர்களுக்கு அளிக்க வேண்டும் எனவும கழிவுப்பொருட்களை காசாக்கும் வகையில் தொழில் முயற்சிகளை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது, ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் நர்னவாரே மணிஷ்சங்கர்ராவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் ராஜவேல், உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரூபேஷ்குமார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.பாலசுப்பிரமணியம் (வ.ஊ), சிவக்குமார் (கி.ஊ), ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா பொன்முருகன், நசரத்பேட்டை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.