திருத்தணி முருகன் கோயிலுகாகு சொந்தமான கார்த்திகேயன் குடிலில் மாமிச விருந்து சாப்பிட்ட கோயில் மேற்பார்வையாளர்கள். வீடியோ வைரலானதால் முருக பக்தர்கள் கொந்தளிப்பு :

பதிவு:2022-09-02 10:51:50



திருத்தணி முருகன் கோயிலுகாகு சொந்தமான கார்த்திகேயன் குடிலில் மாமிச விருந்து சாப்பிட்ட கோயில் மேற்பார்வையாளர்கள். வீடியோ வைரலானதால் முருக பக்தர்கள் கொந்தளிப்பு :

திருத்தணி முருகன் கோயிலுகாகு சொந்தமான கார்த்திகேயன் குடிலில் மாமிச விருந்து சாப்பிட்ட கோயில் மேற்பார்வையாளர்கள். வீடியோ வைரலானதால் முருக பக்தர்கள் கொந்தளிப்பு :

திருவள்ளூர் செப் 01 : திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும் தமிழகம் முழுவதும் இருந்தும் ஆந்திரா கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் உலகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் முருக பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். அவர்கள் கார் வேன் ரயில் பஸ் போன்ற வாகனங்களில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.‌ மேலும் சில பக்தர்கள் கோவில் குடியிருப்புகளில் தங்கி மறுநாள் காலையில் அபிஷேகம் தரிசனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பூஜைகளில் பங்கேற்பது பக்தர்களின் வாடிக்கை. இதற்காக திருக்கோயில் சார்பாக கார்த்திகேயன் குடியிருப்பு, தணிகை இல்லம், சரவணன் பொய்கை குடியிருப்பு ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகிறது .

இதில் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி விட்டு மறுநாள் சாமி தரிசனம் செய்வது அல்லது திருமண விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பக்தர்கள் வந்து தங்குவது ஆகியவற்றிற்காக கோவில் சார்பில் பக்தர்களுக்கு கட்டண அடிப்படையில் வழங்கப்படுகிறது.‌ இதில் அறைகள் மற்றும் காட்டேஜ்கள் உள்ளன. காட்டேஜில் பாதி எடுத்தால் 750 ரூபாயும், முழு காட்டேஜ் என்றால் 1500 ரூபாயும் இதில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் சோசியல் மீடியாக்களில் திடீரென ஒரு வீடியோ ஒன்று வைரலாகி பரவியிருக்கிறது. அதில் திருத்தணி கார்த்திகேயன் குடியிருப்பில் காட்டேஜ் 69 இல் கடந்த ஆடி மாத கிருத்திகையின்போது அறையில் சூப்பரண்டுகள் கலைவாணன் வித்தியாசாகர் இருவரும் சிக்கன் மட்டன், முட்டை என்று சகல விருந்துகளை தங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை வாங்கி வரச்சொல்லி கோவில் ஊழியர்களே அவர்களுக்கு மாமிச விருந்தை கோவிலுக்கு சொந்தமான காட்டேஜில் வழங்குகின்றனர்.

அதனை ருசித்து அவர்கள் உணவருந்துகின்றனர். இந்த வீடியோ வைரலாக வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. இதைக்கண்ட முருக பக்தர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கொதித்து எழுந்துள்ளனர். கோயில் குடியிருப்பு என்பது பக்தர்கள் தங்குகின்ற அறைக்கு சைவத்தைத் தவிர அங்க வேற எதுவும் அனுமதிக்க கூடாது. ஆனால் கோவில் ஊழியரே இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டிருப்பது பக்தர்களிடம் அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படேத்திறுள்ளது.இதற்கு அனைத்துக்கும் காரணம் கோவில் துணை ஆணையர் விஜயாவும் உடந்தையாக இருப்பாரோ என்று பலரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். இவர்கள் கோயிலுக்கு பொறுப்புக்கு வந்த நாள் முதல் பல்வேறு புகார்களுக்கும் பல்வேறு இன்னல்களுக்கும் பக்தர்களும் ஆளாகியுள்ளனர் . இவை அனைத்திற்கும் தமிழக முதல்வர் முற்றுப்புள்ளி வைப்பார் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.