திருத்தணி அருகே சிமெண்ட் சாலையில் தண்ணீர் குழாய் புதைப்பு : வெடியா திமுக அரசின் இந்த நடவடிக்கையால் குடி தண்ணீருக்காக ஏங்கும் இருளர் பெண்கள் :

பதிவு:2022-09-02 10:55:19

திருவள்ளூர் செப் 01 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் தெக்களூர் ஊராட்சியில் இருளர் காலனியில் 30க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பைப் லைன் அமைத்து தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அத் தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இந் நிலையில், பழங்குடியினர் நலத்துறை சார்பில் இருளர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

வீடுகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தெரு குடிநீர் குழாய் சிமெண்ட் சாலை அமைக்கும் போது ஒப்பந்ததாரரின் அலட்சிய போக்கால் குடத்தில் தண்ணீர் பிடிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த தெருவில் வசிக்கும் இருளர் இன பெண்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடையின்றி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருளர் இன பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.