பதிவு:2022-09-02 11:00:59
திருவள்ளூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் தலைமை காவலர் தலையில் படுகாயம் : உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை : திருவள்ளூர் செப் 01 : திருவள்ளூர் மாவட்டம் பாண்டுர் கிராமத்தைச் சேர்ந்த அப்புன்செல்வன் என்பவர் ஆவடி ஆணையரகம் ஆவடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பணியை முடித்துவிட்டு நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் சென்று கொண்டிருந்தபோது பின்பக்கமாக தாறுமாறாக ஓடிய கார் திடீரென தலைமை காவலர் அன்பு செல்வன் சென்ற இரு சக்கரம் வாகனம் மீது பயங்கரமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
இதில் அன்புசெல்வன் தலையில் பலத்த காயமடைந்து திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் முதல் சிகிச்சைப் பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்மேலும் தாறுமாறாக ஓடிய கார் முன் சென்ற ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் எரையூர் சத்யா, பெண் மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சம்பவம் குறித்த தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலிசார் காரை இயக்கிய திருவள்ளூர் ம.பொ.சி தெருவைச் சார்ந்த ரோகித் அஸ்வா (19) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சாலை விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.