ஊத்துக்கோட்டையில் திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது இளைஞர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிப் படுகொலை :

பதிவு:2022-09-02 11:04:52

திருவள்ளூர் செப் 01 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராபின்(26).இவர் நேற்றிரவு ஊத்துக்கோட்டையில் திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு தமது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்ற போது, 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 3 பேர் ராபினை வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த ஊத்துக்கோட்டை காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.முன் விரோதத்தால் கொலை நடந்ததா என்பது குறித்து ஊத்துக்கோட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.