பதிவு:2022-09-02 11:10:45
திருவள்ளூர் மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் 1800 599 7620 மற்றும் 9840327626 என்ற எண்ணில் புகார் செய்யலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் செப் 02 : திருவள்ளூர் மாவட்டத்தில் இ சேவை மையங்களில் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க எண்களை அறிவித்தார் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாடு அரசு இ-சேவை முகமையின் கீழ் திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான கட்டண விவரம் அடங்கிய பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் தெரிவித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் இ-சேவை மையங்களின் மீது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட உதவி மைய தொலைபேசி எண்களான 1800 599 7620 மற்றும் 9840327626 வாட்ஸ் ஆப் எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.