பதிவு:2022-09-02 11:14:28
திருவள்ளூரில் 3-வது முறை கணவணை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணிண் கள்ளக் காதலணின் நண்பன் தன்னுடன் வாழ வற்புறுத்தியாதாக பரபரப்பு வாக்குமூலம் : கள்ளக்காதலன் அவனது நண்பன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் :
திருவள்ளூர் செப் 02 : திருவள்ளூர் அடுத்த பெரிய குப்பம் கம்பர் தெருவில் அமுதா என்ற பெண் தூக்கில் தொங்கி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பபி மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் அமுதா என்ற பெண் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எருமை வெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் இவரது கணவர் பாபு பள்ளி பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருவதாகவும் இவர்களுக்கு ஜெயஸ்ரீ மற்றும் கிஷோர் ஆகிய இரண்டு பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் அமுதா அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிஸ்வரன் என்பவருடன் தவறான பழக்கம் ஏற்பட்டததை அடுத்து கணவன் குழந்தைகளை விட்டுவிட்டு 2முறை ஜோதீஸ்வரன் உடன் சென்றுவிட்டதாகவும் குழந்தைகளுக்காக இரண்டு முறை வேறொருவருடன் சென்ற மனைவியை பேசி சமாதானப்படுத்தி அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் மூன்றாவது முறை கள்ளக்காதலுடன் சென்றுள்ளார். கள்ளக் காதலன் ஜோதீஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணமாக 4 வயதில் ஒரு குழந்தையும் இருந்தது. இந்த நிலையில் ஜோதீஸ்வரனின் குடும்பத்தார் இவனை குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் இரண்டு மாதங்கள் கழித்து தன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நினைப்பு வரவே அமுதாவுடன் சண்டை போட்டு வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அமுதாவை நீ செத்துப் போ செத்துப் போனால் தான் நான் என் குடும்பத்தோடு சேர்ந்து வாழ முடியும் என சண்டையிட்டு சென்றுள்ளார். இதை அடுத்து அமுதாவிற்கும் ஜோதிஸ்வரனுக்கும் இடைத்தரகராக செயல்பட்ட ஜோதிஸ்வரனின் நண்பன் சிவப்பிரகாசம் கள்ளக்காதலன் தான் உன்னை விட்டு போய்விட்டானே அதனால் நீ என்னோடு வாழ வேண்டும் நான் பார்த்துகொள்கிறேன் என வற்புறுத்தியதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளக்காதலன் நடுத்தெருவில் விட்டுச் சென்ற நிலையில் அவரது நண்பர் தன்னோடு வாழ வற்புறுத்திய நிலையில் அமுதா மன உளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது இதனையடுத்து தற்போது தற்கொலைக்கு தூண்டியதாக ஜோதீஸ்வரன் மற்றும் சிவப்பிரகாசம் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அமுதாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு கொலையா தற்கொலையா என வழக்கு மாற்றப்படும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.