வழிப்பாதை சம்பந்தமாக பொதுமக்கள் திடீர் போராட்டம்

பதிவு:2022-03-31 23:35:15



பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

வழிப்பாதை சம்பந்தமாக பொதுமக்கள் திடீர் போராட்டம்

வேலூர்: வேலூர் சாய்நாதபுரம் தனியார் கல்லூரி அருகே வழிப் பாதை ஒன்று உள்ளது. இந்த வழியை சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பாதையை தனியார் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் தனியார் கல்லூரி அருகே உள்ள இடத்தில் அரிச்சந்திரன் சாமி சிலை ஒன்றை பொதுமக்கள் வைத்தனர்.