பதிவு:2022-09-02 11:24:28
திருவள்ளூரில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் செப் 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாத விழா 2022-ஐ தொடர்ந்து ஊட்டச்சத்து குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் நடைபெற்ற பல்வேறு ஊட்டச்சத்து விழிப்புணர்வு செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மே, ஜூன் மாதங்களில் எடை,உயரம் எடுக்கப்பட்டது. அதன்படி, 1 லட்சத்து 45 ஆயிரத்து 868 குழந்தைகளில் 1,857 குழந்தைகள் தீவிர எடை குறைவாகவும் மற்றும் 7,208 குழந்தைகள் மிதமான எடை குறைவாகவும், 1,719 குழந்தைகள் கடுமையான மெலிவு தன்மையும் மற்றும் 4,868 குழந்தைகள் மிதமான மெலிவு தன்மை கொண்டவைகள் என ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் உள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டசசத்து மாதமாக கொண்டாடப்படுகிறது. இதில் குறிப்பாக திருவள்ளுர் மாவட்டத்தில் 1000 நாட்களுக்கு ( 9 மாதம் கர்ப்பக்காலம் - 270 நாட்கள், 6 மாதம் தாய்ப்பால் மட்டும் கொடுத்தல் - 180 நாட்கள், 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் - 550 நாட்கள்) முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தி, தேசிய ஊட்டச்சத்து மாதத்தில், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர வேண்டும் என்பதையும் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து பல்வேறு நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாத விழா 2022-ஐ தொடர்ந்து பொதுமக்களிடையே ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடையே ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் அங்கன்வாடி பணியாளர்கள் பங்குபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியையும், பொதுமக்களிடையே ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் “ஊட்டச்சத்து மாத விழாவிற்கான ஊராட்சிகளில் ஊட்டச்சத்து தூண்டுதல்” என்ற விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும், கொடிசையத்து துவக்கி வைத்து, அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ம.ஜெகதீஷ் சந்திர போஸ், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.