பதிவு:2022-09-04 23:21:12
ஆந்திராவுக்கு கடத்துவதற்காக திருத்தணி ரயில் நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த ஒன்றை டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல்
திருவள்ளூர் செப் 03 : திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்துவது தொடர்கதையாக உள்ளது. ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற வாகனங்களிலும் ரயில், பேருந்து மூலமாகவும் ரேசன் அரிசியை கடத்தி விற்பனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுவதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக இன்று காலை திருத்தணி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையில் இருந்து திருத்தணி வழியாக திருப்பதி செல்லக்கூடிய மின்சார ரயில் எடுத்துச் செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 மூட்டைகள் கொண்ட சுமார் ஒன்றரை டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ரேஷன் அரிசி ரயில் நிலையத்தில் பதுக்கி வைத்து மின்சார ரயில் கடத்து முயன்றவர்கள் யார் என்று பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.