பதிவு:2022-09-04 23:24:04
திருத்தணி அருகே திருமண ஏற்பாடுகள் பெற்றோர் செய்து வந்த நிலையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு :
திருவள்ளூர் செப் 03 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கோரமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார் கூலித் தொழிலாளியான அவரது மகன் நிஷா. இவர் திருத்தணியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பு விரைவில் முடிய உள்ள நிலையில், அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையில் நிஷா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பதறியடுத்துக்கொண்டு அவரை மீட்டு உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். திருமணம் செய்ய அதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்த நிலையில் கல்லூரி மாணவி தூக்கட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .