திருவள்ளூர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா,தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி: மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2022-09-04 23:25:24



திருவள்ளூர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா,தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி: மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா,தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு  பேச்சுப்போட்டி:  மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் செப் 04 : திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி 15.09.2022 அன்றும், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி 17.09.2022 அன்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி திருவள்ளுர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கு -II இல் நடைபெறவுள்ளது.

அதன்படி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேரறிஞர் அண்ணா பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் தாய் மண்ணிற்குப் பெயர் சூட்டிய தநயன்,மாணவர்க்கு அண்ணா,அண்ணாவின் மேடைத் தமிழ்,அண்ணா வழியில் அயராது உழைப்போம் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்,பேரறிஞர் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள்,அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி ! மக்களிடம் செல் ஆகிய தலைப்புக்கள் ஆகும்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு தந்தை பெரியார் பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் தொண்டு செய்து பழுத்த பழம்,தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும்,தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம்,தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்,தந்தை பெரியாரும் மூட நம்பிக்கை ஒழிப்பும்,பெண் ஏன் அடிமையானாள்?,இனிவரும் உலகம்,சமுதாய விஞ்ஞானி பெரியார்,உலகச்சிந்தனையாளர்களும் பெரியாரும் ஆகிய தலைப்புக்கள் ஆகும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே நடைபெறும் பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000,மூன்றாம் பரிசாக ரூ.2000, வழங்கப்பெறும். மேலும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகையாக ரூ.2,000 வீதம் வழங்கப்படும்.

பள்ளி போட்டியானது முற்பகல் 10.00 மணிக்கும், கல்லூரி போட்டி பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும். திருவள்ளூர் மாவட்டத்தில் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி கல்வி இயக்குநர் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும் பள்ளி மாணவ மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.